Scholarship applications open for Tamil speakers வியாழன், 23 ஜூன் 2022 நியூ சவுத் வேல்ஸ் மொழிபெயர்த்துரைப்பாளர் உதவித்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன மற்றொரு மொழியைப் பேசும் திறன் உங்களிடம் இருந்தால், ஒரு மொழிபெயர்த்துரைப்பாளராக ஒரு வாழ்க்கைப்பணியைத் தொடர உங்களுக்குத் தனித்துவமான வாய்ப்பு கிடைக்கும். அதற்காக நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்தின் உலகத் தரம் வாய்ந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு நன்றி. “2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, நியூ சவுத் வேல்ஸ் மொழிபெயர்த்துரைப்பாளர் உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் 265-க்கும் மேற்பட்டவர்கள் தகுதிவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக ஏற்கனவே மாறியுள்ளனர் என்று பல்கலாச்சார அமைச்சர் மார்க் கோர் (Mark Coure) தெரிவித்தார்.    “நியூ சவுத் வேல்ஸ் மாநிலமானது 215-க்கு மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் மற்றும் வட்டாரப் பேச்சுவழக்குகளைப் பேசும் மக்களின் தாயகமாகும், மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களின் சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் அவர்களுக்கு உதவிபுரியவும் அதை வெளிக்கொணர்வது முக்கியம் என்று நான் நம்புகிறேன்,” என்று திரு கோர் (Mr Coure) கூறினார்.       “புதிதான மற்றும் வளர்ந்து வரும் சமுதாய மொழிகளில் வெற்றிகரமாக உதவித்தொகை பெறுபவர்களுக்கு, அவர்களின் பாடமுறைக் கட்டணம் செலுத்தப்படும், மேலும் பட்டப்படிப்பு முடிந்ததும் அவர்களுக்கு பல்கலாச்சார நியூ சவுத் வேல்ஸ் (Multicultural NSW) மூலம் தொடர்ந்து வழிகாட்டுதலும், தற்காலிகமான வேலையும் (casual employment) வழங்கப்படும்.”    ஆஃப்ரிகான்ஸ் (Afrikaans), அம்ஹாரிக் (Amharic), பிஸ்லாமா (Bislama), குக் தீவுகள் மாவோரி ...

Read More →