Scholarship applications open for Tamil speakers

Scholarship applications open for Tamil speakers

: Scholarship applications open for Tamil speakers

வியாழன், 23 ஜூன் 2022

நியூ சவுத் வேல்ஸ் மொழிபெயர்த்துரைப்பாளர் உதவித்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன

மற்றொரு மொழியைப் பேசும் திறன் உங்களிடம் இருந்தால், ஒரு மொழிபெயர்த்துரைப்பாளராக ஒரு வாழ்க்கைப்பணியைத் தொடர உங்களுக்குத் தனித்துவமான வாய்ப்பு கிடைக்கும். அதற்காக நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்தின் உலகத் தரம் வாய்ந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு நன்றி.

“2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, நியூ சவுத் வேல்ஸ் மொழிபெயர்த்துரைப்பாளர் உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் 265-க்கும் மேற்பட்டவர்கள் தகுதிவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக ஏற்கனவே மாறியுள்ளனர் என்று பல்கலாச்சார அமைச்சர் மார்க் கோர் (Mark Coure) தெரிவித்தார்.   

“நியூ சவுத் வேல்ஸ் மாநிலமானது 215-க்கு மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் மற்றும் வட்டாரப் பேச்சுவழக்குகளைப் பேசும் மக்களின் தாயகமாகும், மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களின் சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் அவர்களுக்கு உதவிபுரியவும் அதை வெளிக்கொணர்வது முக்கியம் என்று நான் நம்புகிறேன்,” என்று திரு கோர் (Mr Coure) கூறினார்.     

 “புதிதான மற்றும் வளர்ந்து வரும் சமுதாய மொழிகளில் வெற்றிகரமாக உதவித்தொகை பெறுபவர்களுக்கு, அவர்களின் பாடமுறைக் கட்டணம் செலுத்தப்படும், மேலும் பட்டப்படிப்பு முடிந்ததும் அவர்களுக்கு பல்கலாச்சார நியூ சவுத் வேல்ஸ் (Multicultural NSW) மூலம் தொடர்ந்து வழிகாட்டுதலும், தற்காலிகமான வேலையும் (casual employment) வழங்கப்படும்.”   

ஆஃப்ரிகான்ஸ் (Afrikaans), அம்ஹாரிக் (Amharic), பிஸ்லாமா (Bislama), குக் தீவுகள் மாவோரி (Cook Islands Māori), க்ரெயோல் (Creole), டாரி (Dari), டிங்கா (Dinka), யொவ் (Ewe), ஃபிஜியன் (Fijian), ஹசராகி (Hazaragi), கன்னடம் (Kannada), கரேன் (Karen), கரேன்னி (Karenni), கெமர் (Khmer,) கின்யாமுலேங்கே (Kinyamulenge), கிருண்டி (Kirundi), கொன்யாங்கா மனிங்கா (மாண்டிங்கோ) (Konyanka Maninka (Mandingo)), கிரியோ (Krio), குர்திஷ்-குர்மான்ஜி (Kurdish-Kurmanji), லிங்காலா (Lingala), மங்கோலியன் (Mongolian), என்டெபெலே (Ndebele), ஷோனா (Shona), சோமாலி (Somali), சுவாஹிலி (Swahili), தமிழ் (Tamil), தெலுங்கு (Telugu), டெட்டம் (Tetum), டிக்ரின்யா (Tigrinya) ஆகிய மொழிகளைப் பேசக்கூடிய அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.   

நியூ சவுத் வேல்ஸில் அதிகமாகப் புதியவர்கள் வந்து குடியேறுவதால், இந்த மொழிகள் வளர்ந்து வரும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக திரு கோர் (Mr Coure) கூறினார்.    

“நியூ சவுத் வேல்சுக்கு வந்து வாழ்வதை மக்கள் தெரிவு செய்வதால், அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ளவோ ​​அல்லது சேவைகளை அணுகவோ முடியாமல் போகலாம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம்,” என்று திரு கோர் (Mr Coure) கூறினார்.    

“அதனால்தான் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் – அவர்கள் நம்முடைய சமூகத்தை, ஆங்கிலத்தில் புலமை குறைந்தவர்களை அல்லது அறவே இல்லாதவர்களை அணுகக்கூடிய வகையில் மாற்றுவதற்கு உதவுகிறார்கள், மேலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு விடாமல் பார்த்து கொள்கிறார்கள்.”   

பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசிய அங்கீகார ஆணையத்தின் (National Accreditation Authority for Translators and Interpreters) மூலம் மொழிபெயர்த்துரைப்பாளராகச் சான்றிதழைப் பெறவும் தகுதி உடையவர்களாவார்கள்.   

உதவித்தொகை பற்றிய கூடுதல் தகவலுக்கும், மற்றும் திட்டத்தில் உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தவும் பின்வரும் இணையதளத்துக்குச் செல்லவும்: multicultural.nsw.gov.au

MEDIA: Scott Hodder | 0455 094 282

Comments are closed.