பிராட்ஃபீல்ட் (Bradfield) சொற்பொழிவு – ‘க்ரௌன்’ சிட்னி
(வழங்கலைச் சரிபார்க்க)
அந்த அறிமுக உரைக்கு உங்களுக்கு நன்றி பென் (Ben).
எனது அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றச் சகாக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கும் இன்று இங்கே நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மைக்கேல் மில்லர் (Michael Miller).
பிராட்ஃபீல்ட் (Bradfield) ஆளுநர்கள் குழுமம்
பெரியோர்களே, தாய்மார்களே.
பிராட்ஃபீல்ட் (Bradfield) சொற்பொழிவை மீண்டும் ஒருமுறை நடத்தியமைக்கு ‘டெய்லி டெலிகிராஃப்’ (Daily Telegraph) -க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
இது என் மனதுக்கு மிகவும் பிடித்த நிகழ்வுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது நான் நேசிக்கும் இரண்டு விஷயங்களை ஒருங்கிணைக்கிறது – தைரியமான யோசனைகள் மற்றும் நமது அழகான நகரம்.
உண்மையில் ஒவ்வொரு ஆண்டும், இதே அறையில் அமர்ந்திருப்பவர்களால் இந்த மன்றத்தில் புதிய யோசனைகள் பிறக்கின்றன.
பிராட்ஃபீல்ட் (Bradfield) செய்ததைப் போலவே அவர்கள் நமது நகரத்தையும் – நமது வாழ்க்கையையும் – மேலும் சிறப்பாக மாற்றுகிறார்கள்.
மாற்றுக் கருத்து இல்லாத ஒன்றைச் சொல்லி நான் ஆரம்பிக்கிறேன்.
சிட்னி உலகின் மிகவும் தலைசிறந்த நகரம் என்று நான் நம்புகிறேன்
நான் இந்த நகரத்தையும், மற்றும் அதை பற்றிய அனைத்து விஷயங்களையும் நேசிக்கிறேன்.
அது முழுமையானதல்ல என்று இப்போது எனக்குத் தெரியும் – ஆனால் அதன் குறைபாடுகளையும் கூட நான் நேசிக்கிறேன்.
நம்முடையது ஆஸ்திரேலியாவின் முதலாவதும், தலைசிறந்ததுமான நகரம்.
நாம் இந்த பெரிய தென்னாட்டின் இதயத்துடிப்பு.
அத்துடன் நாம் உலகிற்கு ஆஸ்திரேலியாவின் முகம்.
சொந்த மண்ணில் நம் கால்கள் உறுதியாக பதிந்திருந்தாலும், நமது கண்ணோட்டம் உலகளாவியது என்பதில் நாம் தனித்துவமானவர்கள்.
மெல்போர்ன் மக்களிடம், உங்களுக்குப் போட்டி யார் என்று கேட்டால், அவர்கள் பெரும்பாலும் சிட்னி என்றுதான் சொல்வார்கள்.
ஆனால் சிட்னியைப் பொறுத்தவரை, நமது தரநிலை உள்ளூர் அல்ல – லண்டன், டோக்கியோ, நியூயார்க் மற்றும் பாரிஸ் போன்ற உலகின் தலைசிறந்த நகரங்களுடன் நாம் போட்டியிடுகிறோம்.
ஆனால் நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் வேறொரு நகரம் அல்ல.
நமக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் நம்முடைய தற்போதைய நிலைதான்.
நம்முடைய சாதனைகளிலேயே நின்றுகொண்டு, விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நமது போக்குதான்.
ஜான் பிராட்ஃபீல்டின் (Bradfield) வாழ்க்கை இந்த அபாயத்தைச் சமாளிப்பதற்கும், உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக நமது சரியான இடத்தைப் பெறுவதற்கும் மூன்று முக்கியமான படிப்பினைகளை வழங்குகிறது என்று நான் நினைக்கிறேன்.
பாடம் #1
முதல் பாடம் என்னவென்றால், நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும், ஏனெனில் மாற்றம் என்பது கடினமானது, அத்துடன் அது சிலகாலம் எடுக்கும்.
துறைமுகப் பாலம் ஒரே நாளில் கட்டப்படவில்லை.
1815 -ஆம் ஆண்டில், இது தண்டனைக் கைதியும் மற்றும் கட்டிடக் கலைஞருமான பிரான்சிஸ் கிரீன்வே (Francis Greenway) என்பவரால் முதலில் பரிந்துரைக்கப்பட்ட பாலமாகும்.
பிராட்ஃபீல்ட் (Bradfield) 1900 -இல் தனது சொந்த எதிர்கால நோக்குடன் அதைக் கையிலெடுக்கும் முன்பே இது நடந்தது.
1923 வரைக்கும் உண்மையில் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை.
வழியெங்கிலும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுடன், இது முழுவதும் சுமுகமான பயணமாக இல்லை.
ஆனால் பிராட்ஃபீல்ட் (Bradfield) விடாது தொடர்ந்து சென்றார், இறுதியில்தான் அவரது எதிர்கால நோக்கு உணரப்பட்டது.
இது எங்கள் அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடம், நாங்கள் அதிவேக சக்தியுடன் எங்கள் கட்டடத் தொழில் வளர்ச்சியைச் செய்துள்ளோம்.
கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள், விரைவுப் போக்குவரத்துகள் (metros) மற்றும் நெடுஞ்சாலைகளை (motorways) உருவாக்கியுள்ளோம்.
பெருஞ்சாலைகள் (highways) மற்றும் இலகுரக ரயில்கள் (light-rails), பூங்காவனங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் விளையாட்டரங்கங்கள்.
மாற்றத்தை உருவாக்குவது என்பது கண்ணுக்குத் தெரிந்தவை மீது போர் தொடுப்பதைப் போன்றது மற்றும் இதுவரை பார்க்க இயலாத எதிர்காலத்திற்கு மக்களை நகர்த்த முயற்சிக்கிறது என்பதை நாம் பார்த்தோம்.
உண்மையில், அநேகமாக நாம் கட்டமைத்த ஒவ்வொரு செயல் திட்டத்திற்கும் எதிர்ப்பு இருந்துகொண்டே உள்ளது;
– வடமேற்கு மெட்ரோவிலிருந்து ‘நார்த்கானெக்ஸ்’ (NorthConnex) வரை,
– சிட்னி கால்பந்து விளையாட்டரங்கம் முதல் நவீன சிட்னி (Sydney Modern) வரை,
– ‘பவர்ஹவுஸ்’ (Powerhouse) செல்ல இலகுரக ரயில் (light rail)
– ட்வீட் (Tweed), வடக்கு கடற்கரைகள் (Northern Beaches) மற்றும் புதிய ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ (Prince of Wales) போன்ற மருத்துவமனைகள் கூட எதிர்ப்பைச் சந்தித்தன
கடந்த வாரத்தில் நான் எம்4-எம்8 சுரங்கப்பாதையில் நிலத்தடியில் இருந்தேன்.
‘ப்ளூ மவுண்டன்ஸில்’ (Blue Mountains) இருந்து சிட்னி விமான நிலையத்திற்கு இடையில் எந்தவொரு போக்குவரத்து விளக்கும் இல்லாமல் நீங்கள் ஓட்டக்கூடிய வகையில் ஒரு சாலை உள்ளது.
இனி இந்தப் புதிய சாலை திறக்கப்பட்டாலும், அதையும் எதிர்க்கும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
பிராட்ஃபீல்டின் (Bradfield) நாளில் கூட, உல்லாசப் படகு நடத்துநர்கள் (ferry operators) பாலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், குதிரை மற்றும் வண்டி ஓட்டுநர்கள் கார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் வேறு சில செய்தித்தாள்கள் பரவலாக அறியப்படும் வகையில் ஓபரா ஹவுஸை (Opera House) எதிர்த்தன.
குறுகிய கால அரசியலின் நோக்கத்தில், ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கான வாதத்தை விட எந்த வாதமும் நம்பவைக்கக்கூடியதாக இருக்காது.
அதனால்தான் விடாமுயற்சி மிகவும் முக்கியமானதாகும்.
பாடம் #2
பிராட்ஃபீல்ட் (Bradfield) எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் இரண்டாவது விஷயம் என்னவென்றால், நீங்கள் தைரியமாகவும் விஷயங்களை மாறுபட்ட வகையிலும் செய்வதற்குத் துணிவு வேண்டும்.
பாலத்திற்கான வளைவு வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அவர் இதைச் செய்தார் – இந்த முடிவு கடினமானது மற்றும் தைரியமானது என்று கூறப்பட்டது.
இந்தப் படிப்பினையை எங்கள் நிதியளிப்பின் மூலம், நகரத்தை வடிவமைக்கும் செயல்திட்டங்களுக்கு நமது அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது.
ஆனால் தலைசிறந்த நகரங்கள் எஃகு மற்றும் சிமெண்டால் மட்டும் கட்டப்படவில்லை.
தலைசிறந்த நகரங்கள் என்பவை மக்களைப் பற்றியதாகும், நமது நகரத்தில் உள்ள அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நான் விரும்புகிறேன்.
மூன்று உதாரணங்களை உங்களுக்குத் தருகிறேன்.
ஆரோக்கியம்.
தேசிய அளவில் நமது முழு சுகாதார அமைப்பும் அழுத்தத்தில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதிகமான மருத்துவமனைகளை உருவாக்குவது மற்றும் அதிக செவிலியர்களை பணியமர்த்துவது மட்டும் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை.
எனவே நாங்கள் விஷயங்களை வித்தியாசமாகச் செய்து முன்னேறுகிறோம் – அதே சமயத்தில் சாதனை அளவிலான நிதியையும் வழங்குகிறோம்.
நமது மாநிலம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அவர்களின் பொது மருத்துவரின் (GP) வழக்கமான மருந்துச் சீட்டு தேவைப்படுகிறது.
மக்கள் தங்கள் வழக்கமான மருந்துவகைகளைப் பெறுவதற்காக மருத்துவரின் அறுவை சிகிச்சைகளைத் தடுப்பதில் அர்த்தமில்லை.
எனவே நாங்கள் அதைச் சரிசெய்து, முதல் முறையாக மருந்தாளுநர்கள் தங்களது வாடிக்கை நோயாளிகளுக்கு நேரடியாக மருந்துச் சீட்டுகளை வழங்க நாங்கள் அனுமதிக்கிறோம்.
பிராட்ஃபீல்டின் (Bradfield) காலத்தில் இருந்த படகு நடத்துநர்களைப் போலவே, எங்கள் மாற்றங்கள் ஆஸ்திரேலியாவில் பொது மருத்துவ முறையை முடிவுக்குக் கொண்டுவரும் என்று மருத்துவர் சங்கம் கூறியது.
விக்டோரியாவுடன் இணைந்து, எங்கள் பொது மருத்துவர் (GP) நடைமுறைகளை அதிவேக சக்தியுடன் செய்வதற்கு, எங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் அழுத்தத்தைக் குறைக்க, நீண்ட நேரப் பணி மற்றும் ஒரே இடத்தில் சேவைகளுடனான ஒரு புதிய தீர்வை நாங்கள் பின்பற்றுகிறோம்.
வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளுவதில், முதலாவது வீடு வாங்குபவர்களுக்கு முத்திரைக் கட்டணத்தை (stamp duty) நாங்கள் நீக்குகிறோம்.
இது 150 ஆண்டுகளுக்கு முன்பு, சில தொழில்முனைவு மத்திய-நிலை கருவூல அதிகாரிகள் நியூ சவுத் வேல்சில் முத்திரை வரி (stamp duty) பற்றிய யோசனையைக் கொண்டு வந்தனர்.
அது 0.5 சதவீதம் அல்லது ஒவ்வொரு 100 பவுண்டுக்கும் 10 ஷில்லிங்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு துண்டு காகிதத்தில் ஒரு முத்திரையிடுவது வீட்டு உரிமையை ஒரு தலைமுறைக்கு நிறுத்தும்.
இன்று, அந்த ஒரு முடிவு – தலைமுறைகளாக கேள்வி எழுப்பப்படாதது – இப்போது மாநிலத்தின் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குக் காரணமாயிருக்கிறது.
முதலாவது வீடு வாங்குபவர்களுக்கு முத்திரை வரியை (stamp duty) விருப்பமாக மாற்றும் எங்கள் கொள்கையானது எதிர்பார்த்தது போலவே எதிர்ப்பை சரமாரியாகக் கட்டவிழ்த்து விட்டது.
ஆனால் நான் எனது குழந்தைகளைப் பார்க்கிறேன், அவர்களின் வீட்டு உரிமைக்கான வாய்ப்புகளையும் பார்க்கிறேன், அத்துடன் நான் நினைப்பது என்னவென்றால்: 150 ஆண்டுகள் பழமையான வரியை – உலகிலேயே மிகவும் பயனில்லாத வரியை – இந்த நகரில் வீட்டு உரிமை என்ற நிலையில் மக்களைப் பிடித்து வைத்திருப்பதைத் தொடர எப்படி அனுமதிக்க முடியும்.
இப்போது கல்வி.
நம் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் வேண்டுமானால், விஷயங்களை வித்தியாசமாகச் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.
எனவே பழைய 9 முதல் 3 மணி என்னும் பள்ளி நேரத்தை மாற்றுகிறோம், ஏனென்றால் 100 ஆண்டுகளுக்கு முன்பு சரிப்பட்டு வந்தது, இன்று உழைக்கும் குடும்பங்களுக்குப் பொருந்தாது.
எங்கள் பள்ளி அமைப்பில் முன்-மழலையர்ப் பள்ளி (pre-kindergarten) எனப்படும் கல்விக்கான முற்றிலும் புது வகுப்பை அறிமுகப்படுத்துகிறோம்.
எங்களின் சிறந்த ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் நாங்கள் வழங்குகிறோம்.
ஹெச்.எஸ்.சி.யில் நாங்கள் நடைமுறை வர்த்தக (practical trade) பாடங்களைச் சேர்க்கிறோம்.
ஒரு புது வகையான உயர்நிலைக் கல்வியை (tertiary education) நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம், அதன்மூலம் எதிர்காலத்தில் குழந்தைகளை வேலைக்காகத் தயார்ப்படுத்துவதன் பொருட்டு, பல்கலைக்கழகங்களையும் தொழில்துறையையும் ஒன்றிணைக்கிறோம்.
இவை அனைத்தும், எப்பொழுதும் நடந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலைக்கு ஒரு நேரடிச் சவாலாக உள்ளன.
எதிர்காலத்தை நாம் வெல்ல வேண்டுமானால், கல்வியில் புதுமைகளைப் புகுத்த நமக்குத் தைரியம் வேண்டும்.
எனவே நமது குழந்தைகளை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் புதிய வழியை நான் இன்று அறிவிக்கிறேன்.
நமது மேற்குப் பகுதியில் உள்ள குழந்தைகள் கல்வி பயின்று, உலகின் முன்னணி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
எனவே ‘வெஸ்ட்மெட்’டில் (Westmead) 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு கல்வி வளாகத்தை நாங்கள் உருவாக்க உள்ளோம்.
அதில் எங்கள் மேற்குப் பகுதிக்காக ஒரு புதிய ஆரம்பப் பள்ளி மற்றும் ஒரு புதிய உயர் தகுதி (selective) உயர்நிலைப் பள்ளியுடன் – முன்-மழலையர் பள்ளி (pre-K) முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 3000 மாணவர்கள் இருப்பர்.
‘வெஸ்ட்மெட்’ சுகாதாரம் மற்றும் புத்தாக்கம் (Westmead Health and Innovation) மாவட்டத்தில் இந்த வளாகம் இணைந்து இருக்கும்.
பெரிய மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களுடன் – அடுத்த தலைமுறைக்கான தலைவர்களுக்கு ஆதரவளிக்க நமது புத்திசாலித்தனமான மனங்கள் ஒன்றிணைகின்றன.
இது போன்ற கோட்பாடு ஆஸ்திரேலியாவிலேயே முதல் முறையாகும்.
இந்தப் பள்ளிகள் நமது வருங்கால பிரதமரையோ அல்லது முதலமைச்சரையோ உருவாக்குவதாக மட்டும் நான் பார்க்கவில்லை.
மருத்துவம் மற்றும் அறிவியலில் வருங்காலத்தில் நோபல் பரிசு வெல்லப் போகும் நம்மவர்களுக்கு, நமது மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பயிற்சிக் களமாகத்தான் அவற்றை நான் பார்க்கிறேன்.
இது ஓர் ஆரம்பம்தான், ஆகவே இந்த புதிய கற்றல் வழியானது மாநிலம் முழுவதும் பரவுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.
ஏனென்றால், விஷயங்களை வித்தியாசமாகச் செய்வதே நம் குழந்தைகளுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை அமைப்பதற்கான ஒரே வழியாகும்.
பாடம் #3
பிராட்ஃபீல்ட் (Bradfield) நமக்குக் கற்றுக்கொடுக்கும் கடைசி விஷயம் என்னவென்றால், நாம் எப்போதும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
அவர் தனது பாலத்தை வடிவமைத்தபோது, அவர் அதை அன்றைய தேவைக்காக மட்டுமே செய்யவில்லை, நாளைய தேவைக்காகவும் செய்தார்.
மனிதகுலம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டிலும் – வரப்போகும் வளர்ச்சியைப் பற்றி அவர் அறிந்திருந்தார் – அதற்கேற்ப அவர் அதைக் கட்டமைத்தார்.
அவரே கூறியது போல்: “எதிர்கால தலைமுறைகள் நம் தலைமுறையை நாம் செய்த செயல்களால் தீர்மானிக்கும்.”
நான் விரும்புவதெல்லாம், ஓர் அரசாக நமது மரபானது, அடுத்த தலைமுறையைப் பற்றித்தான் கவனம் செலுத்த வேண்டும், அடுத்த தேர்தலைப் பற்றி அல்ல.
என்னைப் பொறுத்தவரை, ஒரு பழமைவாதியாக இருப்பது என்பது நிலையான தன்மை மற்றும் மாற்றம் ஏற்படுத்தல் போன்றவற்றின் ஒரு கலவையாகும் – அத்துடன் சிறந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், மற்ற எல்லாவற்றையும் புதுமைப்படுத்துதல் போன்றவையும் ஆகும்.
பர்க் (Burke) கூறியது போல், பழமைவாதம் ஒரு கடமையின் அடிப்படையில் நிறுவப்பட்டது என்பதால் அது கட்டாயம் இருக்க வேண்டும்.
நமக்கு முன் சென்றவர்களையும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் மட்டுமல்ல, முக்கியமாக இனிமேல் வரப்போகும் மக்களையும் மதிக்க வேண்டும்.
நமது குழந்தைகள். மற்றும் அவர்களின் குழந்தைகள்.
சிட்னி போன்ற ஒரு நகரத்தை அப்படியே நிறுத்தி வைப்பது அடுத்த தலைமுறைக்கு எதிரான குற்றமாகும்.
இந்த நகரத்தின் அசாத்திய அழகையும், அதன் வரம்பற்ற வாய்ப்பையும் நாம் கட்டாயம் பாதுகாத்துக் கட்டியெழுப்ப வேண்டும்.
முடிவுரை
நான் விரும்புவதெல்லாம் உலகின் தலைசிறந்த நகரமாக விளங்கும் சிட்னியில் நாம் அனைவரும் வாழ வேண்டும் என்பதுதான் என்று கூறி நான் முடிக்கிறேன்.
இந்த கட்டடங்களும், செயல்திட்டங்களும் அதன் ஒரு பகுதியாகும்.
ஆனால் இவற்றை நாம் நமது மக்களுக்காக மட்டுமே கட்டுகிறோம்.
நான் விரும்புவதெல்லாம், நமது நகரம் நம்முடைய குடும்பங்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட வேண்டும்,
இலட்சியம் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பின் மையமாக…
உத்வேகம் தரக்கூடிய, மகிழ்ச்சி மிகுந்த நகரமாக…
உலகத்திற்கான நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாக…
நாம் பகிர்ந்து கொண்ட கடந்த காலத்தை மதிக்கும் நகரமாக…
அது நமது நிகழ்காலத்தின் தருணங்களை அதிகப்படுத்தும் விதமாக…
அத்துடன் நமது கூட்டு எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக இருக்க வேண்டும்.
இன்று நான் நம்புவதெல்லாம், நாம் எப்படிப்பட்ட நகரமாக இருக்க விரும்புகிறோம் என்பதைப் பற்றி ஒரு வரம்பை எதிர்கொள்கிறோம் என்பதுதான்.
நாம் தற்போதைய நிலையில் தொடர்ந்து இருந்துகொண்டு, இன்றைய சவால்களில் சிக்கிக் கொண்டு விடலாம்.
அல்லது பிராட்ஃபீல்ட் (Bradfield) நமக்குக் கற்பித்த பாடங்களை ஆயுதமாகக் கொண்டு, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறலாம்.
அவை விஷயங்கள் கடினமாக இருக்கும்போது விடாமுயற்சி செய்தல், விஷயங்களை வித்தியாசமாகச் செய்யத் துணிதல், நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்லுதல் போன்றவைதான்.