சர்வதேச மாணவர்களை வேலைகளுடன் இணைக்கும் புதிய நிகழ்ச்சித் திட்டம்   

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022

 

சர்வதேச மாணவர்களை வேலைகளுடன் இணைக்கும் புதிய நிகழ்ச்சித் திட்டம்   

 

ஆஸ்திரேலியாவிலேயே முதன்முதலாக அறிமுகமாகும் ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டமானது, நாட்டின் மிகப்பெரிய, மற்றும் மாறுபட்ட மாநிலப் பொருளாதாரம் கொண்ட நியூ சவுத் வேல்சில் உள்ள வேலையளிப்போர்களுடன் சர்வதேச மாணவர்களை நேரடியாக இணைப்பதன் மூலம் தொழிலாளர் சந்தையில் உள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும்.   

தொழில்முனைவு, முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அமைச்சர் அலிஸ்டர் ஹென்ஸ்கென்ஸ் (Alister Henskens) கூறுகையில், ‘நியூ சவுத் வேல்ஸ் வேலைகளை சர்வதேச மாணவர்களுடன் இணைத்தல்’ (NSW Jobs Connect for International Students)  என்ற திட்டத்தை வழங்குவதற்காக நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கமானது, நியூ சவுத் வேல்ஸ் ஆய்வு (Study NSW) மூலம் முன்னணி வேலைவாய்ப்புச் சந்தையான ‘ஸீக்’ (SEEK) உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்றார்.   

“136,000 -க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸில் தீவிரமாகப் படித்து வருகின்றனர், அவர்களது உள்ளூர் சமூகங்களில் ஒருங்கிணைத்து தங்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்கிறார்கள், எனவே அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதும், அதற்குப் பிறகும் நாம் அவர்களுக்கு ஆதரவளிப்பது முக்கியமாகும்,” என்று திரு ஹென்ஸ்கென்ஸ் (Mr Henskens) கூறினார்.    

“இந்தப் புதுமையான நிகழ்ச்சித் திட்டமானது, மாணவர்களுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்புகளை அடையாளம் காணவும், நியூ சவுத் வேல்சைச் சார்ந்த வேலையளிப்போர்களை ஒரு வலுவான, மாறுபட்ட மற்றும் நம்பகமான திறமையுள்ள ஆதாரவளத்துடன் இணைக்கவும் உதவும், இது பொருளாதாரத்தை வளர்க்கவும், நியூ சவுத் வேல்சுக்குப் பிரகாசமான ஒரு எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உதவும்.”    

இன்று முதல், ‘ஸீக்’ (SEEK) இயங்குதளமானது, “#நியூ சவுத் வேல்ஸ் ஜாப்ஸ் கனெக்ட்” (“#NSW Jobs Connect”) என்ற ஒரு வடிகட்டியைக் (filter) கொண்டிருக்கும், இது நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ‘அலியன்ஸ்’ காப்பீடு (Allianz Insurance) மற்றும் புற்றுநோய் கவுன்சில் நியூ சவுத் வேல்ஸ் (Cancer Council NSW) உட்பட வேலையளிப்போர்களால் வெளியிடப்படும் வேலை வாய்ப்புகளைச் சர்வதேச மாணவர்கள் எளிதாகக் கண்டறிய உதவுகிறது.   

நிதி, கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள வேலையளிப்போர்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்பதால், இந்த முன்னோடித் திட்டம் இதுவே முதல்முறை என்று ‘ஸீக்’கின் (SEEK) அரசாங்க உறவுகளுக்கான தலைவர் கேய்டி டெய்லர் (Kadi Taylor) கூறினார்.   

“வேலையளிப்போர்கள் பலர், சர்வதேச மாணவர்கள் தாங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதும், படிப்பை முடித்த பின்னும் வேலை செய்யும் உரிமையைப் பெற்றிருப்பதை அறிந்திருக்கவில்லை, மேலும் அவர்களில் பலருக்குப் படிப்பு முடிந்தவுடன் ஆறு ஆண்டுகள் வரை வேலை செய்யும் உரிமை உள்ளது,” என்று திருமதி டெய்லர் (Ms Taylor) கூறினார்.    

“இந்நிகழ்ச்சித் திட்டமானது, மாணவர்களையும் வேலையளிப்போர்களையும் எங்கள் இயங்குதளத்தின் மூலமாகவும், நேருக்குநேர் நடக்கும் நிகழ்வுகளிலும் ஒன்றிணைத்து, வாய்ப்புகளை உருவாக்குவதும், அத்துடன் இரு தரப்புகளுக்கும் அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்ளச் செய்வதுமாகும்.”  

‘அலியன்ஸ்’ ஆஸ்திரேலியா (Allianz Australia) தலைமை மனிதவள அதிகாரி விக்கி டிராகௌசிஸ் (Vicky Drakousis) இந்த புதிய முன்னெடுப்பை வரவேற்றுள்ளார்.   

“இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம், சர்வதேச மாணவர்களுக்கு மதிப்புமிக்க தொழில் வாய்ப்புகளை சிறந்த முறையில் வழங்கும் அதே வேளையில், ஒரு புதிய திறமைக் குழுவுடன் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் வளர்ந்து வரும் எங்கள் வணிகத்தை ஆதரிக்க அனுமதிக்கிறது. இந்த மாணவர்கள் ‘அலியன்ஸ்’க்கு (Allianz)  நுண்ணறிவு மற்றும் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டு வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று திருமதி டிராகௌசிஸ் (Ms Drakousis) கூறினார்.    

நீங்கள் நியூ சவுத் வேல்சில் ஒரு வேலையளிப்போராக இருந்து, இந்த முன்னெடுப்பில் சேரவும், சர்வதேச மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யவும் ஆர்வமாக இருந்தால் இருந்தால், உங்கள் ஆர்வ வெளிப்பாட்டினை (expression of interest) இங்கே  சமர்ப்பிக்கவும்.     

நீங்கள் வேலைவாய்ப்பைத் தேடுகின்ற நியூ சவுத் வேல்ஸின் ஒரு சர்வதேச மாணவராகவோ, அல்லது பட்டதாரியாகவோ இருந்தால், தற்போதைய வேலை வாய்ப்புகள் கொண்ட, பதிவுசெய்யப்பட்ட வணிகங்களைக் கண்டறியப் பின்வரும் வலைத்தள இணைப்புக்குச் செல்லவும்:  Study NSW    

MEDIA: Miki Nicholson | 0477 089 657

Download the PDF file .

Comments are closed.