செவ்வாய்க் கிழமை, 22 நவம்பர் 2022
நியூ சவுத் வேல்ஸ் மதத் தலைவர்கள் குடும்ப வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றுபடுகின்றனர்
அனைத்து முக்கிய மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 70 -க்கும் மேற்பட்ட முக்கிய மதத் தலைவர்கள் இன்று குடும்ப வன்முறைக்கு முடிவுகட்ட, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர். .
கிறிஸ்தவ, முஸ்லீம், யூத, இந்து, பௌத்த மற்றும் சீக்கிய சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட இந்தப் பிரகடனத்தில், குடும்ப வன்முறைச் செயல்களைத் தீர்ப்பதற்கும், எதிர்வினையாற்றுவதற்கும், வெளிப்படையாகப் பேசுவதற்கும், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முறையில் ஆதரவளிப்பதற்கும், சர்வமதக் குழுவினால் வரைவு செய்யப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட பல உறுதிமொழிகள் அடங்கியிருந்தன.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைத் தடுப்புக்கான அமைச்சர் நடாலி வார்டு (Natalie Ward) கூறுகையில், இந்தப் பிரகடனம் வீடு மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பை நிரூபித்துள்ளது என்றார்.
“மூத்த மதத் தலைவர்களின் இந்தப் பிரகடனம், வீடு மற்றும் குடும்ப வன்முறையின் பரவலைக் குறைப்பதற்கான நோக்கம், உரிமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஐக்கிய உணர்வை உருவாக்க உதவியது,” என்று திருமதி வார்டு (Mrs Ward) கூறினார்.
“ஒவ்வொருவரும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம், மற்றும் நமது சமூகத்தில் வீடு மற்றும் குடும்ப வன்முறைகள் மன்னிக்கப்படுவதில்லை அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதில் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும்.”
சமூகமும், மதத் தலைவர்களும், மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கமும் இணைந்து செயல்படும் போது, அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்று பன்முகக் கலாச்சார அமைச்சர் மார்க் கோர் (Mark Coure) தெரிவித்தார்.
“இந்தத் தலைவர்கள் அவரவர் சமூகங்களுக்குள் ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் அவர்கள் வழிகாட்டுதல் மற்றும் தகவல்களுக்காக கருத்தில் கொள்ளப்படுகிறார்கள்,” என்று திரு கோர் (Mr Coure) கூறினார்.
“நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் இதை அங்கீகரிக்கிறது, மேலும் அவர்களுடனான எங்கள் கூட்டாண்மை, குறிப்பாக வீடு மற்றும் குடும்ப வன்முறை போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு வரும்போது, சமூகங்களை மிகவும் திறம்பட இணைப்பதில் மிக முக்கியமானதாகும்.
“இந்தத் தலைவர்கள் மக்களை அணுகும்போதோ அல்லது அவர்களின் சமூகங்களுடன் ஈடுபடும்போதோ அவர்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் தகவல்களை அவர்களுக்கு வழங்க, நாங்கள் அவர்களுடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்.”
குடும்ப வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குப் பல்வேறு நம்பிக்கைத் தலைவர்களை ஒன்றிணைத்து, இப்பிரகடனத்தில் கையெழுத்திட்டது ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிக்கிறது என்று ‘யுனைட்டிங்’ தேவாலயத்தைச் (Uniting Church) சேர்ந்த மறைத்திரு சைமன் ஹான்ஸ்ஃபோர்ட் (Reverend Simon Hansford) கூறினார்.
“வீடு மற்றும் குடும்ப வன்முறையானது சமூகம் முழுவதும் நிகழ்கிறது, அது பாகுபாடு காட்டுவதில்லை,” என்று மறைத்திரு ஹான்ஸ்ஃபோர்ட் (Rev. Hansford) கூறினார்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கும், தப்பிப்பிழைத்தவர்களுக்கும், மற்றும் குடும்ப வன்முறையை அனுபவிப்பவர்களின் குடும்பங்களுக்கும், சமூகங்கள் எப்போதும் பாதுகாப்பான இடமாக இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், அத்துடன் வீடு மற்றும் குடும்ப வன்முறையை அதன் எல்லா வகையிலும் நிவர்த்தி செய்வதில் தலைவர்களாகிய நாங்கள் வகிக்கும் முக்கிய பங்கை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.”
MEDIA: Will Dempsey | Minister Ward | 0400 471 762
Scott Hodder | Minister Coure | 0455 094 282
https://websitedesigns.com.au/elankanew/wp-content/uploads/2022/11/Tamil-NSW-religious-leaders-unite-to-end-domestic-violence.pdf