translated media releases

முக்கிய கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்களை நடத்த 15 நகராட்சிகளுடன் நியூ சவுத் வேல்ஸ் அரசு கூட்டுச் சேர்கிறது 

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022

NSW Government

சிட்னி, ‘நியூகாஸில்’ (Newcastle) மற்றும் ‘இல்லவாரா’வில் (Illawarra) உள்ள நகராட்சிகளால் நடத்தப்படும் 21 முக்கிய கலாச்சார விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் 8 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ததன் மூலம் மாநிலத்தின் நிகழ்ச்சிகளின் அட்டவணை பெரிதாகி விட்டது.   

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்துடன் இணைந்து முக்கிய பல்கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்காக, மாநிலத்தின் ஆறு நகரங்களில் உள்ள 15 நகராட்சிகளுக்கு ஆண்டுக்கு 500,000 டாலர்கள் வரை, இரண்டு ஆண்டுகளுக்கு மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது.   

பல்கலாச்சாரத்துக்கான அமைச்சர் மார்க் கோரே (Mark Coure) கூறுகையில், நகராட்சிகளுடனான ஒவ்வொரு கூட்டாண்மையும் அவர்களின் நிகழ்வுகளைப் பெரிய சுற்றுலா அம்சங்களாகவும், உள்ளூர்ப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கருவிகளாகவும் ஆக்க உதவும்.   

“மாநிலத்தின் ஆறு நகரங்களில் உள்ள 15 நகராட்சிகளால் நடத்தப்படும் 21 வெவ்வேறு பல்கலாச்சார நிகழ்வுகள் நியூ சவுத் வேல்ஸின் சிறந்த கலாச்சாரம் மற்றும் மத ரீதியான பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாகும்,” என்று திரு கோர் (Mr Coure) கூறினார்.   

“இந்த நிதியுதவியானது இந்த நகராட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவும்.”   

மானிய நிதியுதவி பெறும் நகராட்சிகள் பின்வருமாறு:    

  • ‘பிளாக்டவுன்’ (Blacktown) நகரசபை
  • ‘கேம்ப்பெல்டவுன்’ (Campbelltown) நகரசபை
  • ‘கேன்டர்பரி பேங்க்ஸ்டவுன்’ (Canterbury Bankstown) நகரம்
  • ‘கம்பர்லேண்ட்’ (Cumberland) நகரசபை
  • ‘ஜார்ஜஸ்’ நதி (Georges River) நகராட்சி
  • உள் மேற்கு (Inner West) நகராட்சி  
  • ‘லேக் மெக்குவைரி’ (Lake Macquarie) நகரசபை
  • ‘லிவர்பூல்’ (Liverpool) நகரசபை  
  • ‘மெய்ட்லாண்ட்’ (Maitland) நகரசபை
  • ‘நியூகாஸில்’ (Newcastle) நகரம்
  • ‘போர்ட் ஸ்டீஃபன்ஸ்’ (Port Stephens) நகராட்சி
  • ‘ஷெல்ஹார்பர்’ (Shellharbour) நகரசபை
  • ‘ஸ்ட்ராத்ஃபீல்ட்’ (Strathfield) முனிசிபல் நகராட்சி
  • ‘வில்லோபி’ (Willoughby) நகரசபை
  • ‘உல்லங்காங்’ (Wollongong) நகரசபை

உள்ளூர் சமூகங்களின் குடியிருப்பவர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு இந்தக் கூட்டாண்மை உண்மையான வெற்றியாக இருக்கும் என்று நகராட்சிக்கான அமைச்சர் வெண்டி டக்கர்மேன் (Wendy Tuckerman) கூறினார்.    

“நகராட்சிகள்தான் சமூகத்திற்கு நெருக்கமான அரசாங்கத்தின் நிலையாகும், எனவே நம் ஆறு நகரங்களில் உள்ள நகராட்சிகளுடன் நேரடியாக வேலை செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம், இந்த கொண்டாட்டங்கள் அவர்களின் சமூகங்களுக்கு நேரடியாக பயனளிப்பதை உறுதி செய்யும்,” என்று திருமதி டக்கர்மேன் (Mrs Tuckerman) கூறினார்.   

“நகராட்சிகளுடன் கூட்டுச்சேர்வதன் மூலம், உள்ளூர்த் தலைவர்கள் தலைமையிலான உள்ளூர் கலாச்சாரக் கொண்டாட்டங்களை நாங்கள் மேம்படுத்துகிறோம், பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்ய உதவுகிறோம், இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நகரம் வழங்குகின்ற அனைத்தையும் அனுபவிக்க முடியும்.”   

ஆறு நகரப் பிராந்தியங்களில், ‘லோயர் ஹண்டர்’ (Lower Hunter) மற்றும் நியூகாஸில் பெருநகர் (Greater Newcastle City), மத்திய கடற்கரை நகரம் (Central Coast City), ‘இல்லவாரா-ஷோல்ஹேவன்’ நகரம் (Illawarra-Shoalhaven City), மேற்கு ‘பார்க்லேண்ட்’ நகரம் (Western Parkland City), மத்திய நதி நகரம் (Central River City) மற்றும் கிழக்குத் துறைமுக நகரம் (Eastern Harbour City) ஆகியவை அடங்கும்.    

வெற்றிகண்ட நகராட்சிகள் நிதியை 2023 மற்றும் 2024 -ஆம் ஆண்டிற்கான விழாக்களுக்குப் பயன்படுத்தலாம். வெற்றிகண்ட அனைத்து நகராட்சிகளும் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்துடன் இணைந்து நிகழ்வுகளை நடத்த நிதியுதவி செய்யும். மேலதிகத் தகவலுக்குப் பின்வரும் இணையதளத்துக்குச் செல்லவும்: www.multicultural.nsw.gov.au  

MEDIA: Scott Hodder | Minister Coure | 0455 094 282

Damien Bolte | Minister Tuckerman | 0498 359 624

நிதியுதவி பெறுவனவற்றில் பின்வருன அடங்கும்:

 

 

நகராட்சி

 

திருவிழா

இரண்டு ஆண்டுகளுக்கான நிதியுதவி
‘லிவர்பூல்’ (Liverpool) நகரசபை·       ஆப்பிரிக்கத் தாய்நாடு கலாச்சாரத் திருவிழா 

·       பசிபிக் கோடைக்காலம்   

·       ‘பிரைமவேரா’ (Primavera) லத்தீன் அமெரிக்கத் திருவிழா   

$800,000
‘கம்பர்லேண்ட்’ (Cumberland) நகரசபை·       சந்திரப் புத்தாண்டு

·       ரமலான் தெருக்கடை உணவுத் திருவிழா

·       தீபாவளி  

$700,000
‘வில்லோபி’ (Willoughby) நகரசபை·       சந்திரப் புத்தாண்டு   

·       ‘கேய்-மரியகல்’ (Gai-mariagal) திருவிழா   

·       எழுச்சி (Emerge) திருவிழா

$980,000
‘ஸ்ட்ராத்ஃபீல்ட்’ (Strathfield) நகரசபை‘ஸ்ட்ராத்ஃபீல்ட்’ திருவிழா$468,000
உள் மேற்கு (Inner West) நகராட்சிகலாச்சாரம் X ‘ஆஷ்ஃபீல்ட்’  $137,454.80
‘கேன்டர்பரி பேங்க்ஸ்டவுன்’ (Canterbury Bankstown) நகரம்‘லகேம்பா’ (Lakemba) ரமலான் இரவுகள்   $1,000,000
உல்லங்காங்’ (Wollongong) நகரசபைநடனத் தாவரத் (DancePlant)  திருவிழா$625,000
‘போர்ட் ஸ்டீஃபன்ஸ்’ (Port Stephens) நகராட்சிகுளிர்கால வெப்ப ‘ரேமண்ட்’ (Raymond) மேற்தளம்$100,000
‘ஷெல்ஹார்பர்’ (Shellharbour) நகரசபைகலாச்சார பொக்கிஷங்கள் – வசீகரிக்கும் காடு   $400,000
‘பிளாக்டவுன்’ (Blacktown) நகரசபைபிளாக்டவுனின் சுவைகள்   $500,000
‘நியூகாஸில்’ (Newcastle) நகரம்புதிய ஆண்டு   $400,000
‘ஜார்ஜஸ்’ நதி (Georges River) நகராட்சிசந்திரப் புத்தாண்டுக்கான அறுஞ்சுவைத் திருவிழா   $240,000
‘மெய்ட்லாண்ட்’ (Maitland) நகரசபை‘மைட்லேண்ட் ரிவர்லைட்ஸ்’ (Maitland Riverlights) பல்கலாச்சாரத் திருவிழா   $650,000
‘கேம்ப்பெல்டவுன்’ (Campbelltown) நகரசபை‘கேம்ப்பெல்டவுன்’ ரமலான் இரவுச் சந்தைகள்   $600,000
‘லேக் மெக்குவைரி’ (Lake Macquarie) நகரசபை‘லிவிங் ஸ்மார்ட்’ (Living Smart) வார இறுதித் திருவிழா   $400,000

 

2023 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்சுக்கான சிறந்த ஆஸ்திரேலியர்களுக்கு வாழ்த்துக்கள்

Dominic Perrottet

இன்று மாலை சிட்னியின் லூனா பூங்காவில் (Luna Park) நடந்த விழாவில், 2023 -ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்திரேலியர்கள் (Australians of the Year) அறிவிக்கப்பட்டனர், நியூ சவுத் வேல்ஸ் முதலமைச்சர், நமது மாநிலத்தில் இத்தகைய ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக அந்த விருது பெற்ற நான்கு பேரையும் பாராட்டினார். 

2023 -ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்சுக்கான சிறந்த ஆஸ்திரேலியர் கிரேக் ஃபாஸ்டர் ஏ.எம். (Craig Foster AM) மற்றும் நியூ சவுத் வேல்சுக்கான சிறந்த மூத்த ஆஸ்திரேலியர் (Senior Australian); சிறந்த இளம் ஆஸ்திரேலியர் (Young Australian); மற்றும் சிறந்த உள்ளூர் நாயகன் (Local Hero) பிரிவுகளில் ஊத்வேகத்தை அளிக்கும் மற்ற மூன்று விருது பெற்றவர்களையும் முதலமைச்சர் டோமினிக் பெரோட்டட் (Dominic Perrottet), வாழ்த்தினார்.   

“இன்றிரவில் வெற்றி பெற்ற நான்கு பேர்கள், 16 பேர் கொண்ட ஒரு அசாதாரண குழுவிலிருந்து வந்தவர்கள், அவர்கள் நமது மாநிலத்திற்கும் நமது தேசத்திற்கும் மிக உயர்வான சேவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்,” என்று திரு பெரோட்டெட் (Mr Perrottet) கூறினார்.   

“இந்தக் குழு எங்கள் செழிப்பான மற்றும் சுதந்திரமான நாட்டிற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்வதற்காகத் தங்கள் சொந்த திறன்களையும், திறமைகளையும் பயன்படுத்தியுள்ளது.   

“அவர்களின் ஆர்வமும், விடாமுயற்சியும் நம் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறது, நாம் நேசிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கு நமது தனித்துவமான பங்களிப்புகளைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது.”   

விருது பெற்றவர்களின் அசாதாரணமான தலைமைப் பண்பு, தாராள மனப்பான்மை மற்றும் மாற்றத்திற்கான ஆதரவு ஆகியவை பொதுமக்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், மற்றவர்களின் வாழ்க்கையில் தெளிவான வேறுபாடுகளை ஏற்படுத்துவதாகவும் திரு பெரோட்டட் (Mr Perrottet) கூறினார்.   

இந்த ஆண்டின் நியூ சவுத் வேல்சுக்கான சிறந்த ஆஸ்திரேலியர் (NSW Australian of the Year), கிரேக் ஃபாஸ்டர் ஏ.எம். (Craig Foster AM), ஒரு மனித உரிமைகள் மற்றும் இனவெறி எதிர்ப்பு ஆர்வலர், முன்னாள் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் (Socceroo), மற்றும் பின்தங்கியவர்களுக்காக ஆஸ்திரேலியாவில் மிகவும் சக்திவாய்ந்த குரல் கொடுப்பவர்களில் ஒருவர். 29 முறை தொப்பி பெற்ற கால்பந்தாட்ட விளையாட்டு வீரரும், விருது பெற்ற விளையாட்டு ஒளிபரப்பாளருமான அவர் கடந்த பத்தாண்டுகளில் அகதிகள் உரிமைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்காகப் பிரச்சாரம் செய்துள்ளார். அவர் இனவெறி எதிர்ப்பு, நட்பு மற்றும் அவர் கூறிடும் ‘தீவிர பல்கலாச்சாரம்’ – சமூகங்கள் ஒன்றையொன்று பாதுகாத்தல் போன்றவற்றை ஊக்குவிக்கிறார். 53 வயதான கிரேக் (Craig) ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடியினரின் கால்பந்து அணிகளின் புரவலராக,  Racism. It Stops With Me (இனவெறி. அது என்னோடு நிறுத்தப்படும்) மற்றும் #RacismNotWelcome (#இனவெறிக்கு இங்கு வரவேற்பில்லை) போன்ற பிரச்சாரங்களுடன் சிட்னியில் உள்ள அடிசன் (Addison) சாலை சமூக அமைப்பு மற்றும் உணவுப் பண்டகசாலையில் தன்னார்வத் தொண்டு புரிதல் உள்ளிட்ட பணிகளில் மேம்பட்ட ஆஸ்திரேலியாவுக்காக அயராது உழைக்கிறார்.   

இந்த ஆண்டின் நியூ சவுத் வேல்சுக்கான சிறந்த மூத்த ஆஸ்திரேலியர் (NSW Senior Australian of the Year), 89 வயதான, முன்னாள் செவிலியர் தெரசா பிளேன் (Teresa Plane), ஆஸ்திரேலியாவில் நவீன நோய்த்தடுப்பு சிகிச்சையின் முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்டவர். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லும் போது, இறப்பின் ஐந்து நிலைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த, வாழ்க்கையை மாற்றிப் போட்ட, மனநல மருத்துவர் எலிசபெத் குப்லர்-ரோஸுடனான (Elisabeth Kübler-Ross) நேர்காணலைக் கேட்டு, அவரது ஈடுபாடு தொடங்கியது. அத்துடன் தெரசா (Teresa) தான் எப்போதும் மரணத்தை மறுக்கும் செவிலியராக இருப்பதை உணர்ந்தார். அவர் 1978 -இல் மேற்கு சிட்னியில் உள்ள மவுன்ட் கார்மல் (Mt Carmel) மருத்துவமனையில் ஒரு நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சைப் பிரிவைத் திறப்பதற்கு முன்பு, வெளிநாட்டில் நோய்த்தடுப்பு சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து படித்தார். பின்னர் அவர் ‘மெக்கொயரி’ நல்வாழ்வு (Macquarie Hospice) என்ற இல்லப் பராமரிப்பு மற்றும் பகல்நேரப் பராமரிப்பு மையத்தை நிறுவினார். அவர் சர்வதேசக் கருத்தரங்குகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய மாநாடுகளில் பலமுறை பேசியுள்ளார். 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர் தொடர்ந்து பணிபுரிகிறார் மற்றும் தன்னார்வத் தொண்டு செய்கிறார்.   

பானிஷின் (Banish) நிறுவனர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளரான லோட்டி டால்சியேல் (Lottie Dalziel) இந்த ஆண்டின் நியூ சவுத் வேல்சுக்கான சிறந்த இளம் ஆஸ்திரேலியர் (NSW Young Australian of the Year) ஆவார். மறுசுழற்சி மற்றும் கழிவுகளைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்த பிறகு, 2018 -இல் பானிஷை (Banish) லோட்டி (Lottie) நிறுவினார் – எனவே அவர் பூமியுடன் அன்யோன்யமாக இருக்க ஒரு புத்தாண்டுத் தீர்மானத்தை எடுத்தார். ஆஸ்திரேலியர்களுக்குக் கழிவுகளைக் குறைப்பது குறித்த நம்பகமான தகவல்களையும், வழிமுறைகளையும் வழங்குவதே அவரது நோக்கமாக இருந்து வருகிறது. 29 வயதான லோட்டி (Lottie), முதல் 20 மாதங்களில் 11,000 வீடுகளில் இருந்து 11 டன் கழிவுகள், அல்லது 150,000 தயாரிப்புகளை மறுசுழற்சி செய்யும் முன்னெடுப்புடன், ப்ராட் (BRAD) அதாவது பானிஷ் மறுசுழற்சி மற்றும் அகற்றல் திட்டத்தையும் (Banish Recycled and Disposal Program) நடத்தி வருகிறார். 2020 -ஆம் ஆண்டில், அவர் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் சமூகத்தின் சக்தி பற்றிய தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு (TED) உரை ஒன்றை நிகழ்த்தினார்.   

‘டர்பன்ஸ் 4 ஆஸ்திரேலியா’வை (Turbans 4 Australia) நிறுவிய அமர் சிங் (Amar Singh) நியூ சவுத் வேல்சுக்கான சிறந்த உள்ளூர் நாயகன் (NSW Local Hero). 41 வயதான அவர் மற்றவர்களுக்கு உதவுவது என்பது மதம், மொழி அல்லது கலாச்சார பின்னணியால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று நம்புகிறார். அவர் தனது சீக்கிய தலைப்பாகை மற்றும் தாடி காரணமாக இன அவதூறுகள் மற்றும் அவமதிப்புகளை அனுபவித்த பிறகு ஒரு தொண்டு நிறுவனத்தை நிறுவினார், மேலும் அவர்கள் பயப்படத் தேவையில்லை என்று மக்களுக்கு காட்ட விரும்பினார் அத்துடன் சிரமப்படும் ஆஸ்திரேலியர்களுக்கு உதவத் தொடங்கினார். ஒவ்வொரு வாரமும், மேற்கு சிட்னியில் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு ‘டர்பன்ஸ் 4 ஆஸ்திரேலியா’ பொட்டலங்களாக்கி 450 வரையிலான உணவு மற்றும் மளிகைக் கூடைகளை விநியோகிக்கிறது. ‘டர்பன்ஸ் 4 ஆஸ்திரேலியா’ வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு வைக்கோல்; லிஸ்மோரில் (Lismore) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தெற்குக் கடற்கரையில் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விநியோகப் பொருட்கள்; மற்றும் கோவிட்-19 முழு அடைப்புகளின் போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்களுக்கு உணவுக் கூடைகள் போன்றவற்றை வழங்கியுள்ளது.     

இதற்கும் மேலாக, 2023 உள்ளூர் நாயகன் வகைப்பாடின் 20 -ஆவது ஆண்டைக் குறிக்கிறது. முதன்முதலில் 2003 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது ஆஸ்திரேலியர்கள் தங்கள் உள்ளூர் சமூகத்தில் செய்த அசாதாரண பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.   

25 ஜனவரி 2023 புதன்கிழமை அன்று, கான்பெராவில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் நியூ சவுத் வேல்ஸின் விருது பெற்ற நான்கு பேர்கள், மற்ற மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.    

மேலதிகத் தகவல்களுக்குப் பின்வரும் இணையதளத்துக்குச் செல்லவும்: australianoftheyear.org.au   

MEDIA: Clem Hall | Premier | 0499 818 662

Comments are closed.